திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தலைநகரம் பட நடிகைக்கு என்ன ஆச்சு.? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி.!?
தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைநகரம். இப்படம் திரையரங்கில் வெளியாகி பெரிதளவில் வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தலைநகரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஜோதிர்மயி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் தமிழில் வெடிகுண்டு முருகேசன், சபரி, நான் அவன் இல்லை, பெரியார், அறை எண் 305ல் கடவுள், இதய திருடன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வந்த ஜோதிர்மயூ, 2004 ஆம் வருடம் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ஆறு ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார். இதனை அடுத்து மலையாள இயக்குனர் ஒருவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் இவர்களின் புகைப்படம் வைரலாகி வந்தது.
இதன் படி கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தலைநகரம் பட நடிகை மொட்டை தலையுடன் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து, தலைநகரம் பட நடிகையின் தற்போதைய புகைப்படம் வைரலாகி, இவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.