#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி 64 ஆட்டம் ஆரம்பம்.! இவ்வளவு பிரபலங்களா? வெளியான மாஸ் புகைப்படத்தால் மெர்சலான ரசிகர்கள்!!
தற்போது விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது என அறிவிப்பு வெளிவந்தநிலையில் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அதனை தொடர்ந்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைககளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிப்பதாக படக்குழு சமீபத்தில் தகவல் வெளியிட்டது. மாளவிகா மோகன் ஏற்கனவே தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் மற்றும் மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அப்படத்தில் பிரபல நடிகரான பாக்கியராஜ் அவர்களின் மகன் நடிகர் சாந்தனு நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று விஜய்யின் 64வது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது அதில் படத்தில் நடிக்கவிருக்கும் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்துகொண்டார். இந்நிலையில் இப்புகைப்படங்கள் வைரலான நிலையில் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
With all your Goodwill and Blessings #Thalapathy64 shoot begins. #Thalapathy64Pooja@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @imKBRshanthnu @Jagadishbliss @gopiprasannaa @Lalit_SevenScr @sathyaDP @philoedit @silvastunt @SonyMusicSouth pic.twitter.com/MDSkzgDTiT
— XB Film Creators (@XBFilmCreators) October 3, 2019