#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி 64! பனியனுடன் குத்தாட்டம் போட்ட விஜய்!! படக்குழுவை அதிரவைத்த சூட்டிங் ஸ்பாட் வீடியோ!!
விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து தற்போது மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது என அறிவிப்பு வெளிவந்தநிலையில் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர் நிறுவனம் தயாரிப்பில், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது அதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதேபோல தற்போதும் நடிகர் விஜய் பனியனுடன் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆன நிலையில் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.