திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10 நிமிட காட்சிக்கு கோடியில் செலவு செய்த படக்குழு.. தளபதி 68 அப்டேட்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நியூ திரைப்படத்திற்கு பிறகு, தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, ஜெயராம், வைபவ், அரவிந்த், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்து பகுதிகளில் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க படக்கூடிய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விஜய் இளமையாக தோன்றும் காட்சிகளுக்காக டி ஏஜிங் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 10 நிமிடம் மட்டுமே இடம்பெறும் இந்த காட்சிகளுக்காக மொத்தம் 6 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.