மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கப்போவது யார்? வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் போட்டியிட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது நடித்து வரும் GOAT மற்றும் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த புதிய திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 என்ற திரைப்படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன்படி, இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் அல்லது இயக்குனர் வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திரைப்படத்தின் கதை அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.