#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்" விஜய் ரசிகர்கள் மீது தளபதி#63 படக்குழு காட்டம்
சர்க்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என்பதால் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். AR ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு பின்னிமில்லில் துவங்கியது. இந்த படப்பிடிப்பானது கடந்த 10 ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நேப்பியர் பாலத்தைப் போன்ற பிரமாண்டமான முறையில் செட் அமைத்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பிலிருந்தே ரசிகர்கள் படப்பிடிப்பு தளங்களில் கூட்டமாக குவிந்தும் புகைப்படங்களை எடுத்தும் இணையதளத்தில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் அடுத்து நடக்கவிருக்கும் படப்பிடிப்பு நாட்களில் விஜய்யின் ரசிகர்கள் தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என படக்குழு கோரிக்கை வைத்துள்ளது. பிரம்மாண்ட முறையில் செட்டுகள் அமைத்து இப்போது படப்பிடிப்பு நடைபெற இருப்பதால் எங்களது நேரங்களை வீணடிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
Humble Request to all #ThalapathyVIJAY fans.. Don't Disturb #Thalapathy63 Shoot for upcoming days!!
— #Thalapathy63 (@Vijay63_Movie) February 16, 2019
Huge Set Work going with so many hardwork.. Kindly don't spoil shooting time!! Avoid Revealing Scenes and Dailogues!! 👍
~ @Vijay63_Movie