மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டபுள் கொண்டாட்டம்.. புத்தாண்டில் தளபதி 68 புது அப்டேட்?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
வெங்கட் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர்கள் விஜய் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி, ஜெயராம் அஜ்மல், யோகிபாபு, டிடிவி கணேஷ், பிரேம்ஜி, அமரன் உட்பட பலர் நடித்து உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68.
இப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 68 படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு சர்ப்ரைஸ் ஆக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டு ஸ்பெஷலாக நள்ளிரவு 12 மணிக்கு இந்த போஸ்டர் வெளியிடப்படலாம் என்றும் படத்தின் தலைப்பு ஜனவரி 1-ஆம் தேதி மாலையில் வெளியாகும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.