மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி 68 வில்லன் யார் தெரியுமா.? வெளியான சர்ப்ரைஸ் நியூஸ்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் தனது 68 வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி முதல் முறையாக இணைந்து இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான பூஜை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. இதில் சினேகா, பிரியங்கா மோகன், லைலா கலந்து கொண்டதாக தெரிகிறது.
இந்தத் திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் அதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் வில்லன் நடிகர் பற்றிய செய்திகள் தற்போது வெளியாக இருக்கின்றன. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகரான ஜெயராம் இந்தத் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.