#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி-63 படத்தின் கதாநாயகி இவர்தான்! உறுதி செய்த இயக்குனர் அட்லி
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். இதை தொடர்ந்து தளபதி 63 படத்தில் இயக்குனர் அட்லீயுடன் இணைகிறார் தளபதி விஜய். என்ற்கனவே தெறி, மெர்சல் என வெற்றி படங்களை குடுத்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது.
இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடி யார் என படக்குழு தீவிரமாக தேடிவந்தது. முதலில் தோணி பட நடிகை என செய்திகள் வந்தன, பின்னர் சமந்தா, நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங் என ஆளுக்கு ஒரு பெயர் சொல்ல யார்தான்ப்பா கதாநாயகி என கடுப்பில் இருந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் தளபதி-63 இல் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் சென்சேஷன் ஆன பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தான் விஜய் 63 ஹீரோயின் என தகவல் பரவியது. அதற்கு பதில் அளித்துள்ள நடிகை, "Dai..don’t give me expectations da." என கூறியுள்ளார். இதனால் அவர் படத்தில் இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி 63 படத்தின் கதாநாயகியை உறுதி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தான் தளபதி-63ன் கதாநாயகி என அறிமுகம் செய்துள்ளார் இயக்குனர் அட்லி. ராஜா ராணி படத்தில் ரெஜினா கதாபாத்திரத்திற்கு பிறகு நயன்தாராவை இயக்குவதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் அட்லி.
Extremely happy to have Darling #Nayanthara on board for #thalapathy63 ,after Regina which has always been close to my heart. Working the magic once again! pic.twitter.com/YuTLFDHqhs
— atlee (@Atlee_dir) November 25, 2018