திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாய் பல்லவியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட தண்டேல் படக்குழு: மனதை கொள்ளையடிக்கும் வீடியோ உள்ளே.!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அந்தஸ்து பெற்றவர் நடிகை சாய் பல்லவி. இன்று நடிகை சாய் பல்லவி தனது 32 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது அவர் தண்டேல் என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
பிரேமத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த பல்லவி:
இதனையடுத்து, சாய் பல்லவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த படக்குழு, அவர் நடித்த பல்வேறு படங்களில் இருந்து வீடியோ எடுத்து அதனை பிறந்தநாள் பரிசாக வழங்கி இருக்கிறது. 2015 ம் ஆண்டில் ப்ரேமம் படத்தில் நடித்து பல காதலர்களின் மனதில் கோட்டை கட்டிய சாய் பல்லவி, தற்போது தெலுங்கு பக்கம் திரும்பி இருக்கிறார்.
தண்டேல் திரைப்படம்:
அல்லு அரவிந்த் தயாரிப்பில், நடிகர்கள் சாய் பல்லவி, நாக சைதன்யா உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் தயாராகியுள்ளது. 24 டிசம்பர் 2024 அன்று படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாய் பல்லவியின் பிறந்தநாள் வாழ்த்து வீடியோ: