96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தங்கலான் ரிலீஸ் தள்ளிவைப்பு..!!வெளியான அதிர்ச்சி காரணம்.!
தமிழ் சினிமாவின் வெற்றி மற்றும் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் சியான் விக்ரம் பசுபதி மாளவிகா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தங்கலான் படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்தத் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம் மற்றும் அதனை சுற்றி வாழ்ந்த பூர்வ குடிகளை மையமாக வைத்து உண்மை கதையின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகளில் படக்குழுவினருக்கு திருப்தி ஏற்படாததால் அந்தக் காட்சிகளை மீண்டும் எடுத்து வருவதால் ரிலீஸ் தேதி தாமதமாவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.