திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட அமீர்.! நன்றி மறந்த சகோதரர்கள்.!
சினிமாவை பொறுத்த வரையில் வாரிசு நடிகர்களாக இருப்பவர்கள் சுலபமாக நுழைந்து விடலாம். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் திறமையை பொறுத்து தான் நிலைத்து நிற்க முடியும். அந்த விதத்தில் தான் நடிகர் சிவகுமாரின் 2 மகன்களும் திரை துறையில் காலடியெடுத்து வைத்தார்கள்.
சிவகுமாரின் முகத்திற்காகத்தான் நந்தா திரைப்படத்தில் சூர்யாவிற்கு பாலா வாய்ப்பு கொடுத்தார். ஆனால், சூர்யாவால் பாலா நினைத்தபடி நடிக்க முடியவில்லை. அதன் காரணமாக, பாலா சூர்யாவை கடுமையான வார்த்தைகளால் பேசிவிட்டார். இதனால், படப்பிடிப்பு தளத்தில் சூர்யா கண்கலங்கி விட்டார்.
அப்போது பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர் சூர்யாவிற்கு நடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்து, அதன்படி சூர்யா நடித்ததால், அந்த திரைப்படத்தில் மாஸ் ஹீரோவாக தன்னை காட்டிக் கொண்டிருப்பார்.
அதேபோல சூர்யாவின் சகோதரரான நடிகர் கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடிகர் கார்த்தியை நடிக்க வைத்து, மேலும் அந்த திரைப்படத்தை வெற்றி திரைப்படமாகவும் மாற்றி காட்டி இருப்பார் இயக்குனர் அமீர். இப்படி அமீர்" கார்த்தி, சூர்யா உள்ளிட்ட இருவரையும் அவர்களுக்கும் இருக்கும் நடிப்பை தூண்டிவிட்டதன் பெயரில்தான், தற்போது அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள்.