திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தளபதியின் பிறந்தநாளுக்கு தரமாக வாழ்த்து கூறிய நடிகர் தனுஷ்! அட.. எப்படி கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, ரசிகர்களின் தளபதியாக வலம் வருபவர் விஜய். இவர் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இப்படத்தின் தலைப்பு தளபதியின் பிறந்த நாள் ட்ரீட்டாக ஜூன் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. தளபதி 65 படத்திற்கு "பீஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தனுஷ் நடிகர் விஜய்க்கு தளபதி 65 பட டைட்டிலை வைத்து தரமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார். எப்பவுமே இதே பீஸ்ட் மோடுலயே இருங்க என வாழ்த்தியுள்ளார்.