#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதை செய்யுங்க...சொர்க்கத்தையே பார்க்கலாம்! உருக்கமாக நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துக்கள்!!
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் பெருமளவில் அதிகரித்து அனைவருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்கள் யாரும் உணவின்றி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பல பிரபலங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல பகுதிகளில் தாங்களே முன்வந்து ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தாவும் நாள்தோறும் பசியில் வாடுவோருக்கு உணவளித்து வருகின்றார். இந்நிலையில் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து பாருங்கள், நீங்கள் இறந்தபின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப்பொழுதில் காணமுடியும் என உருக்கமாக கூறியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
.