பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தல அஜித், தளபதி விஜய்.. இந்த மாதிரி கணவர்தான் வேணும்.! அட்டகாசமாக பதிலளித்து அரங்கையே அதிர வைத்த தர்ஷா குப்தா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்த. இவர் ஒரு சில தொடர்களிலும் நடித்துள்ளார். பின்னர் வெள்ளித்திரைக்குத் தாவிய அவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பெருமளவில் பிரபலமானார்.
தொடர்ந்து அவர் இரண்டாவதாக ஓ மை கோஸ்ட் என்ற திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சன்னி லியோன், சதீஷ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாக உள்ளது இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு பேசிய தர்ஷா குப்தாவிடம், உங்களுக்கு எந்த மாதிரியான பசங்களை மிகவும் பிடிக்கும் என தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு அவர், நேர்மையான பையனாக இருக்கணும், நல்ல வீரனாக இருக்க வேண்டும். சாக்லேட் பாய் பசங்கள எனக்கு சுத்தமா பிடிக்காது என கூறியுள்ளார்.
அதற்கு தொகுப்பாளர் தல மாதிரி இருக்கணுமா? தளபதி மாதிரி இருக்கணுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே தர்ஷா சைட் அடிப்பதற்கு தல அஜித் மாதிரியும், சேர்ந்து வாழ தளபதி விஜய் மாதிரியும் இருக்க வேண்டும் என கூறி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.