மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடு தேடிவந்த சர்ப்ரைஸ் பரிசு ! அனுப்புனது யார் தெரியுமா? இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய பிக்பாஸ் தர்ஷன்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் விளம்பர மாடலாவார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் பெருமளவில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் இவர் சமீபத்தில் தனது காதலி சனம் ஷெட்டியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காவல் நிலையம் வரை சென்று பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் புகழ் பேட்டை பைக் நிறுவனமான யமஹா நிருவத்திற்காக மாடலாக போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடலாக இருந்த பைக் ஒன்றினை யமஹா நிறுவனம் தர்ஷனுக்கு பரிசாக கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த பரிசினை கண்டி தர்ஷன் இன்பஅதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகத்துடன் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.