மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல பிரபலங்கள் மத்தியில் ஒத்த இளைஞராக தர்ஷன்! அதுவும் எங்கு பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் விளம்பர மாடலாவார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் பெருமளவில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் நடிகர் கமலும் அவரது ராஜ்கமல் ப்ரொடக்சன் மூலம் தர்சனுக்கு படவாய்ப்பு அளிப்பதாகவும் வாக்களித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 65 -வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கமலின் சொந்த ஊரான பரமகுடியில் அவரது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பிக்பாஸ் தர்சனும் கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அதனை பகிர்ந்து வருகின்றனர்.