மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் 2ம் பாகத்தை கையில் எடுக்கும் வினோத்? வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இதனை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.
இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து அஜித்குமாரை வைத்து மேற்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.
கமல்ஹாசன் வினோத் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் திரைப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் கார்த்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.