மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சலார் திரைப்படத்தின் முதல் நாளில் கொண்டாடித்தீர்த்த ரசிகர்கள்.!
பிரபாஸ் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான சலார் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கே.ஜி.எஃப் மற்றும் கேஜிஎப்-2 உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தின் இயக்குனர் நீல் பிரசாந்த், ஆக்ஷன் கதாநாயகனான பிரபாஸ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பதால், இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் இந்த திரைப்படம் வெளியாகி முதல் காட்சி முடிவடைந்தவுடன் படத்தை பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை தெரிவித்து சென்றனர். அதேபோல கே.ஜி.எஃப் திரைப்படத்தின் 2 பாகங்களிலுமே இருக்கின்ற வலுவான திரைக்கதை இந்த திரைப்படத்தில் இல்லை என்று சொல்லப்பட்டது.
ஆனாலும், இந்த திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ் ரசிகர்கள் முதல் நாளில் இந்த திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். மேலும் இந்த திரைப்படம் தொடர்பான பாசிட்டிவான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.