திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிரடியாக நிறுத்தப்பட்ட 7G ரெயின்போ காலனி-2 படப்பிடிப்பு.! காரணம் இதுதான்.!
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் 7 ஜி ரெயின்போ காலனி. இந்தத் திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கின்றார்.
முதல் பாகத்தில் இசையமைத்திருந்த யுவன் சங்கர் ராஜாவே இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். அதேபோல முதல் பாகத்தில் இருந்த பல்வேறு கதாபாத்திரங்கள் இந்த 2-ம் பாகத்திலும் அப்படியே தொடர்வதாக தெரிகிறது.
இது திரைப்படம் மிக விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கிறது. செல்வராகவன் இயக்கும் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் அவர் நடிகராக அவதாரமெடுத்தார்.
போதுமான பணம் இல்லாததால் நின்றுபோன செல்வராகவனின் திரைப்படம் தற்போது மறுபடியும் ஆரம்பமாகியிருக்கிறது. மீண்டும் இயக்குனராக 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்கிக் கொண்டிருந்த செல்வராகவன், இந்த திரைப்படத்தை 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முடிக்க திட்டமிட்டார்.
ஆனாலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சற்றே தயக்கம் காட்டி வந்தார். ஆனாலும் இதன் படபிடிப்பு 20 நாட்களாக சென்னையில் மிக தீவிரமாக நடந்து வந்தது. இந்த நேரத்தில் தான் இந்த திரைப்படத்திற்கு பணப் பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் செல்வராகவன் இந்த திரைப்படத்தை 15 கோடி ரூபாய் செலவில் முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்திருப்பதால், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறார். ஆனாலும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் திட்டம் போட்டதை விட அதிகரித்ததால், தற்போது படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். செல்வராகவன் மற்றும் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோரிடையே சுமுகமான தீர்வு ஏற்பட்டால், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்குவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.