#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அண்ணாத்த படத்தின் கதை இதுதானா; இணையத்தில் உலாவி வரும் கதைகள்.!
தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற அவர் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்தார். அதுமுதல் அவருடைய சிறிய அசைவுகள் கூட செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு கூட கேளம்பாக்கம் அவருடைய பண்ணை வீட்டிற்கு முறையாக இ-பாஸ் பெற்று சென்றாரா என்ற விவாதம் எழுந்தது. அதன் பிறகு உரிய அனுமதி பெற்றுதான் சென்று வந்தார் என்று ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கு முன்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியானது. அதனைத்தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகளும் தேர்வாகி இருந்தனர். ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக அதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இதுதான் என்று சில கதைகள் இணையத்தில் உலாவி வருகின்றன. அதில் ஒன்று முறை பெண்களான குஷ்புவும் மீனாவும் ரஜினியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் ரஜினி இருவரின் மனதையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு ரஜினிகாந்திற்கு மகளாகப் பிறக்கும் கீர்த்தி சுரேஷை மருமகளாக அடைந்துவிட வேண்டும் என்று குஷ்புவும் மீனாவும் விரும்புகிறார்கள். யாருடைய மருமகளாக அடைந்தார் என்பதே கதையின் கிளைமேக்ஸ் என்று செய்திகள் உலாவி வருகின்றன. ஆனால் இது உண்மையா என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் காமெடி நடிகர்களாக சதீஷ், சூரி நடிப்பதாக தெரிகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கும் குடும்பப்பாங்கான படமாக இருப்பதால் செண்டிமென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.