மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு.. இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு!
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் எழில். இவர் காமெடி மற்றும் காதல் கலந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அதன்படி இவர் துள்ளாத மனமும் துள்ளும், ராஜா, தீபாவளி, மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கிய முதல் திரைப்படமான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் எழில் இந்த திரைப்படம் குறித்த நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் எழில் பேசியதாவது, இந்த படத்தின் ஹீரோ விஜய் சாரி சந்திக்க நேரம் கேட்டபோது, உடனடியாக என்னை வர சொல்லி வாழ்த்து கூறியதோடு, பழைய திரைப்படங்கள் மற்றும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் எனக் கூறியுள்ளார்.
மேலும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சிம்ரனும் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கு முதல் பட வாய்ப்பளித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்பி சௌத்ரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
தற்போது இயக்குனர் எழில் நடிகர் விமல் வைத்து தேசிங்கு ராஜா 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.