#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல அஜித்தை கெட்டவார்த்தையால் திட்டிய நடிகை.. இது எப்போ?.. அவரே வெளியிட்ட ஷாக் நியூஸ்..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் அஜித். இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் தற்போது வரை இப்படத்தில் புதிய அப்டேட் எதுவும் வரவில்லை. ஆனால் இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது டப்பிங் பணியை முடித்துள்ளதாக பதிவிட்டிருந்தனர். அதுபோன்று நடிகை மமதி சாரி துணிவு திரைப்படத்தில் நடித்தது குறித்தும், டப்பிங் குறித்தும் பதிவிட்டிருந்தார்.
அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "துணிவு படத்தில் மிகவும் குறைவான காட்சிகளில் மட்டும் நடித்திருப்பதாகவும், அஜித்தை கெட்டவார்த்தையில் பேசும்படியான காட்சிகளில் நடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்".