90, 2கே இளசுகளின் கனவு நாயகி பெயரில் மோசடி: பணம் அனுப்ப வேண்டாம் - டிக் டாக் இலக்கியா ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!



tic Tok Famous Ilakiya Warning Fake Account on Twitter Platform 

 

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட டிக் டாக்கில், கவர்ச்சியான அசைவு நடனங்களை வெளிப்படுத்தி பிரபலமானவர் இலக்கியா. இவரை டிக்-டாக் இலக்கியா என்று கூறினால் பல இளைஞர்களுக்கும் தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் பெயரில் போலியான கணக்கு தொடங்கி வசூல் வேட்டை நடைபெற்றது. 

தாமதமாக இதுகுறித்த விபரத்தை அறிந்துகொண்ட இலக்கியா, காவல் நிலையத்தில் புகார் அளித்து போலிக்கணக்குகளை முடக்கினார். இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் வெரிபைடு ஐடி-க்கள் பணம் செலுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. 

Ilakiya

இதனால் இலக்கியாவின் பெயரில் போலியான கணக்கை தொடங்கிய மர்ம ஆசாமிகள், இலக்கியா போல பேசி பணத்தை வசூல் செய்ய தொடங்கியுள்ளனர். பணத்தை கொடுத்த பலரும் இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட முறையில் இலக்கியாவுக்கு மெசேஜ் செய்துள்ளனர். 

அப்போதுதான் இலக்கியாவுக்கு தனது பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, போலியான கணக்கு வைத்துள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க இருப்பதாக இலக்கியா தெரிவித்துள்ளார்.