மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#HBDFahadh: விக்ரமின் ரியல் நாயகன் பகத் பாசிலுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துகள்..!
மலையாளத்தில் கையேதும் தூரத் என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் பகத் பாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தெலுங்கில் சந்தன மரங்கள் வெட்டுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படத்தில் இவர் காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரத்தை நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தார்.
கடந்த 2014 ஆம் வருடம் நடிகை நஸ்ரியாவுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ரசிகர்களை கவர்ந்த நாயகன் பகர் பாசிலுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் சிறந்த நடிப்புக்காக கேரள மாநில சினி அவார்ட்ஸ் 4, தென்னிந்திய பிலிம்பேர் அவார்ட்ஸ் 3, ஏசியாநெட் பிலிம் அவார்ட்ஸ் 4, சைமா விருதுகள் 2, வட அமெரிக்க சிறந்த நடிகருக்கான விருது 1 உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.