#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டாப் தமிழ் நடிகைகளின் தற்போதைய உண்மையான வயது என்ன தெரியுமா? முழு விவரம் இதோ!
பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாகவே வளம் வருகின்றனர். ஆனால், நடிகைகளை பொறுத்தவரை ஒருசில படங்களிலையே காணாமல் போய்விடுகின்றனர். அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் சற்று வயதாகிவிட்டால் வாய்ப்புகள் குறைய தொடங்கிவிடுகிறது.
இந்நிலையில் அதிக வயதாகியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சில நடிகைகளின் வயது பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம்.
1 . நயன்தாரா:
18 நவம்பர் 1984 ஆம் தேதி அன்று பிறந்த நடிகை நயன்தாராவின் தற்போதைய வயது 35. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தற்போது தர்பார் படத்தில் நடித்துவருகிறார்.
2 . த்ரிஷா:
4 மே 1983 ஆம் தேதி பிறந்த நடிகை த்ரிஷாவின் தற்போதைய வயது 36. சதுரங்க வேட்டை 2 , ராங்கி போன்ற படங்களில் தற்போது நடித்துவருகிறார் நடிகை த்ரிஷா.
3 . அனுஸ்கா ஷெட்டி:
ரெண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அருந்ததி, வேட்டைக்காரன் படங்கள் மூலம் பிரபலமான நடிகை அனுஷாகாவின் தற்போதைய வயது 38 . இவரது பிறந்த தேதி 7 நவம்பர் 1981.
4 . தமன்னா:
21 டிசம்பர் 1989 ஆம் தேதி பிறந்த நடிகை தமன்னாவின் தற்போதைய வயது 29. சமீபத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்சன் என்ற படத்தில் நடித்திருந்தார் தமன்னா. தற்போது தமிழ் படங்கள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில் இரண்டு தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துவருகிறார் தமன்னா.
5. சமந்தா:
28 ஏப்ரல் 1987 ஆம் தேதி பிறந்த நடிகை சமந்தாவின் தற்போதைய வயது 32. முன்னணி நடிகையாக இருந்துவரும் இவர் பிரபல தெலுங்கு நடிகை நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழக்கையில், சினிமாவிலும் பயங்கர பிசியாக உள்ளார்.