மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இத்தனை கோடியா!! டாப் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா??
தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் திரிஷா. தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் ஹீரோயினின் தோழியாக, சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் திரிஷா. அதனைத் தொடர்ந்து அவர் லேசா லேசா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானார்.
பின்னர் அவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிகை திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். த்ரிஷா அண்மைகாலமாக பெருமளவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
த்ரிஷா கைவசம் தற்போது தி ரோட், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் பெருமளவில் வைரலாகி வருகிறது. நடிகை திரிஷா ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வாங்குகிறாராம். மேலும் வருடத்துக்கு 8 கோடி வரை விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறாராம். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 75 முதல் 80 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.