#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே.. நடிகை திரிஷாவிற்கு இப்படியொரு பிரச்சினையா! வெளிவந்த தகவல்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல பிரபலங்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை த்ரிஷா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
அவரது கைவசம் தற்போது
கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் உள்ளன. மேலும் அவர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திரிஷா அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
— Trish (@trishtrashers) January 7, 2022
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய போதிலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன். இது எனது மிகவும் வேதனையான வாரங்களில் ஒன்றாக இருந்தது. ஆனாலும் தடுப்பூசி போட்டு கொண்டதால் இன்று குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன்.
தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற பிரார்த்தனை செய்த நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்