மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன்னைப் பற்றிய வதந்திக்கு ஒரே ட்வீட்டால் பதிலடி கொடுத்த திரிஷா.!
1999ம் ஆண்டு வெளியான "ஜோடி" படத்தில் சிம்ரனுக்குத் தோழியாக நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கினார் த்ரிஷா. அதன்பிறகு சூர்யாவுடன் "மௌனம் பேசியதே"வில் ஹீரோயினாக நடித்தார். இவரது நடிப்பு மற்றும் இயல்பான அழகால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் த்ரிஷா.
தமிழில் இவர் நடித்த அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, 96 போன்ற படங்களில் இவரது நடிப்பு இன்றளவும் ரசித்து பேசப்பட்டு வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் த்ரிஷா, 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
தற்போது முதன் முறையாக மலையாளத்தில் நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவர் ஒரு மலையாள திரைப்படத் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்தி பரவியுள்ளது. ஏற்கனவே வருண் என்ற தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், " நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியும். வதந்திகளை பரப்பாதீர்கள். அமைதியாக இருங்கள்" என்று ஆங்கில ட்வீட் மூலம், தன்னைக் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திரிஷா.