மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் உன்னை விட்டு போகலை".. பொன்னியின் செல்வன் குந்தவையை பார்த்து ரசிகர்கள் பெருமிதம்.!
தமிழ் திரையுலகில் 40 வயதை தாண்டியும் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. சினிமா துறையில் காலடியெடுத்து வைத்து 40 வருடங்கள் கடந்த போதிலும் இன்னும் திரைதுறையில் மார்க்கெட் சரியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்2 படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் மாடல் அழகியாக தன் வாழ்க்கையை தொடங்கிய திரிஷா 'மெளனம் பேசியதே' படத்தின் மூலமாக தன் திரைபயணத்தை தொடங்கினார். மேலும் சாமி, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், 96, கொடி என பல வெற்றி திரைபடங்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் நடிக்கும் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து படவாய்ப்புகள் திரிஷாவிற்கு வந்து கொண்டே தான் இருக்கிறது. இதன்பின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நாளை வெளியாகயுள்ளதால் இப்படத்தின் புரோமோஷனில் படக்குழுவினருடன் பிஸியாக இருக்கிறார் திரிஷா.
இதுபோன்ற நிலையில், பொன்னியின் செல்வன் பட புரோமொஷனில் எடுக்கபட்ட திரிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைபடங்களை பார்த்து "வயசானலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகல" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.