"டிடிஎப் வாசன் பைக்கை கொளுத்துங்க" - ஜாமின் கேட்ட வாசனை வச்சி செய்த நீதிபதிகள்.. காட்டமான கண்டிப்பு.! முழு விபரம் இதோ..!!



ttf-vasan-bail-rejected-by-madras-high-court

 

விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் தொலைதூரம் சாகசங்கள் செய்து பயணிக்கும் விடியோவை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு பிரபலமான நபர் டிடிஎப் வாசன் என்ற வைகுந்தவாசன் (வயது 23). 

இவர் சாலைகளில் சாகசங்கள் செய்த வழக்கில் ஏற்கனவே சிக்கியிருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

அவர் ஜாமின் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், தங்களின் காட்டமான கருத்துக்களை பதிலாக தெரிவித்துள்ளனர். ஜாமின் கேட்ட டிடிஎப் வாசனின் மனுவில், "சிறையில் மருத்துவ சிகிச்சைகள் சரிவர மேற்கொள்ள வசதி இல்லை. சம்பவத்தன்று சாலையின் குறுக்கே மாடு வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தேன். அதனால் இருசக்கர வாகனத்தின் சக்கரம் தூக்கியது. 

அச்சமயம் நான் பிரேக் அடிக்காமல் இருந்திருந்தால், எனது உயிருக்கும் - கால்நடை உயிருக்கும் ஆபத்து நேர்ந்து இருக்கும். நீதிமன்றம் வைக்கும் நிபந்தனையை நான் ஏற்கிறேன்" என தெரிவித்தார். டிடிஎப் தரப்பு வாதத்தை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், "வைகுந்தவாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறான சாகச விடியோவை பதிவிட்டு, இளம் தலைமுறையை தவறாக வழிநடத்துவது சரியில்லை. 

விபத்தை ஏற்படுத்திய உங்களின் வாகனத்தை கொளுத்திவிடலாம். பல இலட்சம் பின்தொடர்பாளர்களை யூடியூபில் கொண்டுள்ள டிடிஎப் வாசன், இலட்சங்கள் செலவு செய்து உடலை பாதுகாக்க கவசங்கள் அணிகிறார். அவரை பின்தொடருவதில் சிறார்கள் அதிகம். அவர்கள் விடியோவை பார்த்து அதிவேகத்தில் செல்கின்றனர், திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர்.