மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் தற்கொலை செய்ததாக கூறினால், அது கொலை" - டிடிஎப் வாசன் பரபரப்பு வீடியோ வெளியீடு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தர்மத்தை மீறும் நபர்கள் என்னை புண்படுத்துவது ஏன்?. அவர்களின் செயலால் நாளையே நான் தற்கொலை செய்ததாக செய்தி வந்தாலும், அது திட்டமிட்ட கொலை எனபதை புரிந்துகொள்ளுங்கள், எனக்கு அந்த அளவுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது என டிடிஎப் கண்களில் நீர் வராமல் காண்போரை கலங்கடிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் பைக் சம்பந்தமான வீடியோ வெளியிட்டு 2K கிட்ஸ்களின் இதயங்களை வென்றெடுத்த யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் பின்னாளில் சமூக வலைத்தளத்தில் தவிர்க்க இயலாதாக நபராக மாறினார். தற்போது மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் படக்குழுவுடன் காரில் பயணித்தார்.
அப்போது, சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் பயணிக்கையில், எதிர்பாராத விதமாக இவர்களின் கார் விபத்தில் சிக்கியது. இருசக்கர வாகன ஒட்டி லேசான காயம் அடைந்தார். இதுகுறித்த பல செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி டிடிஎப் தரப்புக்கு கடும் அதிர்வலையை தந்தது.
இந்நிலையில், இவைகுறித்த சர்ச்சைக்கு விடையளிக்கும் வகையில் டிடிஎப் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னை எவ்வுளவு புண்படுத்த முடியுமோ, அவ்வுளவு பண்ணிவிட்டார்கள். இங்கு பலரும் தர்மத்தை மீறுகிறார்கள். அதனை எடுத்து கூறினால் நாம் கெட்டவர்களாக மாறுகிறோம்.
பலரும் மீறாமல் தர்மத்தை மீறுகிறார்கள். நமது இயக்குனர் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். பின் உறங்காமல் படத்திற்காக தொடர்ந்து உழைத்து செய்த செயல் தீங்கை ஏற்படுத்தியது. மீண்டும் சென்னைக்கு அதிகாலையில் வந்தார்.
நானும், இயக்குனரின் உதவியாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் காரில் பயணம் செய்தோம். சில ஊடகங்களில் நான் காரை இயக்கியதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டது. நான் காரை இயக்கவில்லை. இயக்குனர் அண்ணன் வாகனம் இயக்க, நான் அருகே மற்றொரு இருக்கையில் இருந்தேன்.
உண்மையில் நான் வாகனம் ஒட்டியிருந்தால், ஆம் என ஒத்துக்கொண்டு இருப்பேன். நான் என்றுமே பொய்க்குப்பொய் என இருக்கமாட்டேன். இருசக்கர வாகனம் ஓட்டும்போது அதிவேகம் குறித்து கூறினார்கள். அதனால் தவறை ஒப்புக்கொண்டு இன்று வரை வாகனத்தை மெதுவாகவே இயக்கினேன்.
நாங்கள் தேநீர் சாப்பிட்டுவிட்டு வரும்போது இயக்குனர் அண்ணன் உறக்கத்தில் இருந்ததால், அவர் 30 கி.மீ வேகத்திலேயே வாகனத்தை வலதுபுறம் நோக்கி இயக்கினார். நான் அண்ணா என கூறியதும் பதறிப்போன அவர், சாலையின் நடுவே தடுப்பில் மோதி பின் இடதுபுறம் நோக்கி வந்துவிட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக விபத்து தவறுதலாக நடந்தது. நான் கார் கதவை திறக்க முயன்றபோது, இடையே பாதாளசாக்கடை இருந்ததால் திறக்க இயலவில்லை. பலரும் ஆட்டோவில் நான் தப்பி சென்றுள்ளதாக கூறியுள்ளார்கள். அங்கு அதிவேகத்தில், மதுபோதையில் விபத்து நடந்ததாக கூறி இருக்கிறார்கள். அவை தவறானது.
சம்பவ இடத்தில் காவல் துறையினர் வந்து விசாரணையும் செய்தார்கள். அவை சி.சி.டி.வி-யில் இருக்கும். நாங்கள் காவல் துறையினர் வரும் வரையில் காத்திருந்து தான் வந்தோம். ஆட்டோவில் பாதிக்கப்பட்ட அண்ணனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம்.
விபத்து நடந்த பின்னர் சமூக சேவை செய்த அக்கா, விபத்திற்குள்ளான நபர் ஆகியோர் முன்னிலையில் பேசப்பட்டு ரூ.10 ஆயிரம் அவரின் செலவுக்கு பணம் கொடுத்தேன். வீட்டிற்கு வந்தபின்னர் XRay செய்ய வேண்டும் என்று கூறியதால், அவருக்கு ரூ.3 ஆயிரம் பணமும் அனுப்பி இருக்கிறேன். சென்னையிலேயே மருத்துவ உதவிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட அண்ணன் போலி செய்திகளை பார்த்து, நீ எங்கு அழைத்தாலும் நான் வந்து உனக்காக பேசுகிறேன் என கூறினார். நான் ஒருவேளை டாக்சி முன்பதிவு செய்து வந்தால், செய்திகளில் எப்படி பதிவிடுவார்கள். இந்த சம்பவத்தில் என் மீது தவறு இல்லை. இயக்குனரின் மீது 2 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நண்பரின் வாகனத்தில் நான் திரைப்படம் பார்க்க சென்றபோது, அவர்களின் வாகனத்தில் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை பார்க்காமல் சென்றேன். என்னை அவர்கள் வறுத்தெடுத்தார்கள், நானும் பதிலுக்கு கத்தியதும், மறுநாள் கொச்சையான தலைப்பில் செய்தி வருகிறது.
எனக்கு நடப்பது அநியாயமாக தெரியவில்லையா?. ஒருவன் வளர்ந்து வந்தால் உன்னை ஏறி மிதிப்பேன் என்பது எப்படிப்பட்டது?. எந்த நியாயம் இது?. இது உங்களுக்கு அநியாமாக தெரிந்தால், எனக்கு ஒத்துழைத்து ஒரு வீடியோ பதிவிடுங்கள். எதிர்காலத்தில் நான் தற்கொலை செய்துகொண்டேன் என செய்தி வந்தால், அது திட்டமிட்ட கொலை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறன்.
என்னை தற்கொலை செய்யும் எண்ணத்திலேயே தூண்டுகிறார்கள். பலரும் என்னை கெட்டவனாக காண்பித்துள்ளார்கள், அப்படியே நான் இருந்துகொள்கிறேன். எனக்கும் கண்கள் கலங்குகிறது, நான் என்ன செய்வது?. எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களை நான் வரவேற்கிறேன். இன்று நான் நாளை நீங்கள். நான் அடி தூங்கிவிட்டேன், உங்களால் முடியாது.
எனது அப்பன் காசு என பலரும் கூறுகிறார்கள். எனது அப்பா இறந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற டெலிவரி நிறுவனத்திற்கு வாகனம் இயக்கி கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து இன்று இந்நிலைக்கு வந்துள்ளேன்" என பேசி இருக்கிறார்.