"ஜாமீனில் வெளியே வந்தும் சும்மா இருக்காத டிடிஎப் வாசன்!" யூட்யூப் சேனல் முடக்கம்!



Ttf vasan you tube channel banned

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் யூட்யூபில் சேனல் ஆரம்பித்து மேக்கப், சினிமா ரிவியூ, பயணம், சமையல் என்று பல ஆக்கப்பூர்வமான வீடியோக்களை வெளியிட்டு சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசன் ட்ராவல் வ்லோக் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

TTF

இவர் சமீபத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் விபத்து ஏற்படுத்தி காயமடைந்தார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 19ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 40நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த அவருக்கு சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே 3 வாரங்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது.

TTF

இதையடுத்து வெளியே வந்த டிடிஎப் வாசன் தனது யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விபத்தின்போது பைக்கில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அவரது யூட்யூப் சேனலை முடக்கவேண்டும் என்று போலீசார் கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.