மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயலலிதாவின் பெயர் கோமளவாளின்னு உங்களுக்கு யாருப்பா சொன்னது? TTV தினகரன் அதிரடி!
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று சர்க்கார் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
படம் முழுவதும் அரசியல் என்பதால் படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்க்கு கிளம்பியுள்ளது. படத்தின் மய்ய கருவே அரசியல் பற்றியும், ஒவொரு வாக்காளரின் உரிமையை பற்றியதும்தான். இந்நிலையில் சர்க்கார் படத்தில் தேவை இல்லாதா காட்சிகள் இருப்பதாகவும், எல்லை மீறினால் படம் தடை செய்யப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
படத்தில் கோமளவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி நடித்திருப்பார். இந்த கோமளவல்லி என்ற கதாபாத்திரம் முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல என்றும் அந்த பெயர் கொண்ட காதாப்பாத்திரத்தில் கூட ஜெயலலிதா நடித்ததே இல்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்த தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.