சிம்புவின் அடுத்த 3 படங்கள் என்ன? வெளியாகிறது முக்கிய அப்டேட்.. விபரம் உள்ளே.!



Update on Simbu Next 3 Movies 

 

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் லிட்டில் சூப்பர்ஸ்டாராக வலம்வந்த நடிகரை எஸ்டிஆர் எனப்படும் சிலம்பரசன். 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்டிஆர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அவர் பல முக்கிய படங்களில் இணைந்து இருக்கிறார். 

இதையும் படிங்க: சிம்பு ரசிகர்களே ரெடியா.? STR பிறந்த நாளில்.. டபுள் கொண்டாட்டம்.. வெளியாகவுள்ள 2 காதல் காவியங்கள்.!

குறிப்பாக இயக்குனர் மணி ரத்னம் - நடிகர் கமல் ஹாசன் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் உருவாகி வரும் தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

பிறந்தநாளில் சர்ப்ரைஸ் அறிவிப்பு?

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 03ம் தேதி எஸ்டிஆர் பிறந்தநாள் சிறப்பிக்கப்படும் நிலையில், அன்று அவரின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த 3 படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில், பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம் குமார், அஸ்வந்த் மாரிமுத்து, தேசிங்கு ஆகியோரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கலாம் என்றும், அந்த படங்களின் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இயக்குனர் மோகன் ஜியுடன் சிம்பு இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் எனவும் ஒரு வட்டாரத்தில் இருந்து தகவல் தெரியவருகிறது. மூன்றாம் தேதி அனைத்துக்கும் விடை கிடைக்கும்.

இதையும் படிங்க: சிம்பு ரசிகர்களே ரெடியா.? STR பிறந்த நாளில்.. டபுள் கொண்டாட்டம்.. வெளியாகவுள்ள 2 காதல் காவியங்கள்.!