மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாகை சூடவா ஹீரோயினுக்கு அடிச்ச லக்கு... புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாகும் இனியா வெளியான அப்டேட் !
வாகை சூடவா மற்றும் மௌன குரூப் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இனியா. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவ்வாறு தற்போது முன்னணி கதாபாத்திரங்களிலும் இரண்டாம் நாயகி ஆகவும் நடித்து வருகிறார். சமீபமாக சமுத்திரகனியின் மனைவியாக ரைட்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரன் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருக்கிறார் இவர். இந்தத் திரைப்படத்தை புதுமுக கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் என்பவர் தயாரித்து அவரை கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் இனியாவுடன் அருந்ததி சோனியா அகர்வால் ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். துரை கே முருகன் என்பவர் இயக்கம் இந்த திரைப்படம் செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படமாக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.