பெரியார் குறித்த சர்ச்சை விவகாரம்.. படக்குழுவினர் கொடுத்த விளக்கம்.!
பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற முழுநீள காமெடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இந்த ட்ரெய்லரில் மறைந்த திராவிடர் கழக தலைவர் பெரியாரை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் இடம் பெற்றிருந்தது.
இதனையடுத்து பெரியார் ஆதரவாளர்கள் எந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரேட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி, "இந்த திரைப்படத்தில் மக்கள் மனதை புண்படும்படி காட்சிகள் அமைக்கப்படவில்லை. படத்தில் ஒரு முக்கிய கருத்து உள்ளது. பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் அதற்கு விளக்கம் அளிப்பார்" என அவர் கூறியுள்ளார்.