தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கதை சொல்ல வரும் இயக்குனர்களை கிண்டலாக பேசிய வடிவேலு.. மேடையில் சர்ச்சையான பேச்சு!
1988ம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கிய "என் தங்கை கல்யாணி" என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார் வடிவேலு. இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மாபெரும் நகைச்சுவை நட்சத்திரமாக உள்ளார். மேலும் வெற்றிகரமான கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது முன்பு போல் பட வாய்ப்புகள் வடிவேலுக்கு இல்லாத நிலையில், சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த "மாமன்னன்" திரைப்படத்தில் ஒரு அழுத்தமான முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, நடைபெற்ற வெற்றிவிழாவில் வடிவேலுவுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் பேசிய அவர் "மாமன்னன் படத்திற்கு பிறகு கதை சொல்ல வருபவர்கள் அனைவரும் சோகமான கதைகளாகவே கொண்டு வருகிறார்கள்.
மேலும் கதை சொல்ல வரும்போது இயக்குனர்களே அழுகிறார்கள். ஏன் என்று கேட்டால், இந்தக் கட்டம் மிகவும் சோகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இப்போதைக்கு சோகம் வேண்டாம். ஒரு ஐந்து வருடங்கள் போகட்டும். முதலில் மக்களுக்கு சிரிப்பைத் தருவோம்" என்று விழாவில் வடிவேலு பேசினார்.