மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணையும் வைகை புயல் வடிவேலு.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலால் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவிற்கு புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக அவரால் நடிக்க முடியவில்லை. சமீபத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு தடை நீங்கியதால் வடிவேல் மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘பரியேறும் பெருமாள்’, தனுசின் கர்ணன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான மாரிசெல்வராஜ் அடுத்து உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் வடிவேலு உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.