மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சம்பளத்தை உயர்த்திய வடிவேலு.? அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள்.!
1988ம் ஆண்டு வெளியான டி. ராஜேந்தர் இயக்கிய 'என் தங்கை கல்யாணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமமானவர் வடிவேலு. முன்னதாக, நண்பர்களுடன் மேடை நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரண் மூலம் சென்னை வந்த வடிவேலு, அவர் நடித்த 'என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் வந்த 'போடா போடா புண்ணாக்கு' என்ற பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடல் வடிவேலு பாடியது தான்.
2006ம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் கதாநாயகனாக நடித்தார். பிறகு 2008ல் மீண்டும் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு, 'தெனாலிராமன்' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் அவர் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. எனவே தற்போது வடிவேலு தன் சம்பளத்தை 5கோடியாக ஏற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.