மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கருணாநிதி பெறாத விமர்சனமா இப்போது இவர்கள் பெறுகிறார்கள்!?" விழாவில் வடிவேலு பேச்சு!
1988ம் ஆண்டு டி. ராஜேந்தரின் "என் தங்கை கல்யாணி" படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இன்று கோலிவுட்டின் காமெடி மன்னனாக இருப்பவர் வடிவேலு. இவரது சொந்த ஊர் மதுரை. எனவே அங்கு ஓடும் வைகை நதியின் பெயரோடு இணைத்து "வைகைப்புயல்" என்று அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததையடுத்து, நேற்று மரம் நடுவிழா நடைபெற்றது. அதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், வடிவேலு, சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவ்விழாவில் பேசிய வடிவேலு, "கருணாநிதி பெறாத விமர்சனமா? எதிர்க்கட்சிகள் ஆயிரம் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் தமிழக அரசு நிவாரண நிதி வழங்குவதில் சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறினார்.
மேலும் மாரி செல்வராஜ் குறித்து கேட்ட கேள்விக்கு "அது அவருடைய ஊர். அதில் எங்கு பள்ளம் இருக்கும் எது எப்படி இருக்கும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அவர் தன் ஊரைப் பற்றி தெரிந்த மனிதனாகத் தான் அங்கு சென்றுள்ளார். அவர் ஊருக்கு அவர் செய்கிறார்" என்று கூறியுள்ளார் வடிவேலு.