இசை காப்புரிமை விவகாரம்; வைரமுத்து அதிரடி ட்விட்.!
சமீபகாலமாகவே இசைஞானி இளையராஜா, பாடல் மற்றும் இசைக்கான உரிமையை கோரி சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார். இது ஆதரவும் எதிர்ப்பும் என இருதரப்பும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
சமீபத்தில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற இசைக்கு தனது உரிமையை கோரி சம்மன் வழங்கி இருந்தார். இந்நிலையில், இசை காப்புரிமை விவகாரத்தில் வைரமுத்து சூசகமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், புயல் வீசத்தொடங்கிவிட்டால் ஜன்னல் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெள்ளம் படையெடுக்க தொடங்கினால் நாணல் நதிக்கரையில் தலைசாய்க்கும். மக்கள் தானாக பேசத்தொடங்கினால் கவிஞன் தனது குரலை தனித்துக்கொள்ள வேண்டும். அதுவே நடக்கிறது" என கூறியுள்ளார்.