அதிர்வலையை ஏற்படுத்திய பாலாவின் 'வணங்கான்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..



Vanangan firstlook poster

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து திரைப்படங்களை இயக்குபவர். தற்போது இவரது இயக்கத்தில் 'வணங்கன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதி நிறைவடையும் நிலையில் உள்ளன.

Vanangan

படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இது போன்ற நிலையில், 'வணங்கான்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் விநாயகர் சிலையையும், கடவுள் நம்பிக்கையற்ற பெரியார் சிலையையும் சுமந்தபடி இருக்கிறார் அருண் விஜய்.

Vanangan

இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கதைக்களத்தை பாலா இயக்குவதால் 'வணங்கான்' திரைப்படம் வெளியாகும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடிக்க விருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.