#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வனிதாவோட ரேஞ்சே இனி வேற!! எல்லாம் மாறப்போகுது!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி கலர்ஸ் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை வனிதா.
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் வனிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், ஒருசில படங்களில் நாயகியகவும் நடித்துள்ளார். இந்நிலையில்தான் தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் சாலையில் நின்று போராடி மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில்தான் பீட்டர்பால் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலையே இருவரும் பிரிந்துவிட, வனிதா மீதான சர்ச்சை மேலும் அதிகமானது.
ஆனால் தன் மீது எழும் சர்ச்சைகள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்த வனிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிவந்தார். ஆனால், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கும், போட்டியாளராக இருந்த வனிதாவுக்கும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக வனிதா, அந்த நிகழ்ச்சியிலிருந்து மட்டுமின்றி விஜய் டிவியில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய வனிதா, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கன்னித்தீவு" என்ற நகைச்சுவை தொடரில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டநிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.