ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த காரியத்தை பாருங்க.. புகைப்படத்துடன் நடிகை வனிதா வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை வனிதா கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானார். வனிதாவிற்கு திருமணமாகி ஒரு மாதங்கள் முடிவடைந்தாலும் சர்ச்சைகள் குறைந்த பாடில்லை.
இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்க்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவிற்கு எதிராகவும் சூர்யா தேவி என்ற பெண், நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கூறி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும்வகையில் வனிதாவும் மோசமாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
See the good hearted social activist threatening me thru her lawyer demanding 1 crore 25 lacs for trying to act as if helping a family and interfering unnecessarily in my personal and acting as a fake judge when she has no authority to do it..sucks the blood of innocent victims pic.twitter.com/V8YKP7D2tB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 29, 2020
இவ்வாறு சமீபத்தில் பேட்டி ஒன்றில் வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர். அப்பொழுது வனிதா மிகவும் மோசமாக, தரக்குறைவாக அவரை திட்டி பேசினார். இதனை கேட்டு கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன் பாதியிலேயே பேட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தன்னையும், தனது கணவர் குறித்தும் தரக்குறைவாக பேசிய வனிதாவுக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
அந்த நோட்டீஸை தனது ட்விட்டரில் வெளியிட்ட வனிதா, ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்றும், தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டும், போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்யும் நல்ல மனமுள்ள சமூக ஆர்வலர் தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக பதிலளித்து வருகின்றனர்.