திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"காதலுக்கு நான் எதிரியா" வனிதா விஜய குமாரின் பரபரப்பு பேட்டி.!
நடிகர் விஜயகுமார்,நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜயுடன் இணைந்து "சந்திரலேகா" என்ற திரைப்படத்தில் நடித்தார். பின் திருமணமானதால் தன் நடிப்பை நிறுத்திவிட்டு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா அவருடன் நன்றாக வாழ்ந்து வந்தார். ஆகாஷ் மற்றும் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு விஜய ஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார். பின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலில் ஆகாஷும் வனிதாவும் பிரிந்தனர்.
எனவே வனிதா விஜயகுமார் ஆனந்த் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் பிறந்த மகளின் பெயர் ஜெயநீதா. நீதிமன்றத்தில் ஆகாஷ் தொடர்ந்த வழக்கின் பேரில் தன் மகன் விஜய் ஹரியை முதல் கணவர் ஆகாஷிடம் ஒப்படைத்தார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமார் தன் சிறு வயது நினைவுகளை தம்முடன் பகிர்ந்தார். அதில் அவர் தன் சகோதரிகளே ஸ்ரீதேவி தான் மிகவும் கோபக்காரர் என்றும் தன் அம்மா அவளை மட்டும் எப்போதும் அடிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். மேலும் என்னை எல்லோரும் காதலுக்கு எதிரி என்று கூறுகின்றனர் ஆனால் யாருக்கும் தெரியாது நானே 12 காதல் திருமணங்களை நடத்தியுள்ளேன். நான் காதலுக்கு எப்போதும் எதிரி இல்லை நல்ல காதலை ஒருபோதும் பிரிக்க முயற்சிக்க மாட்டேன். மேலும் தன் மகன், மற்றும் மகள்கள், சினிமாவில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதுவே என் விருப்பமும் என்று கூறினார்.