96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சஞ்சீவ்வை ஜோடியாக சென்று சந்தித்த பிரபலங்கள்! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக இறுதிகட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் வெறித்தனமாக கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தையும் செய்து வருகின்றனர். இதனால் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான மோதலும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது.
துவக்கத்தில் 20 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் இதுவரை 13பேர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் மேலும் கடந்த வாரம் சஞ்சீவ் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, தாமரை, ராஜு, பாவனி, சிபி, அமீர், நீரூப் ஆகிய 7 பேர் மட்டுமே உள்ளனர்.
இதற்கிடையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ்வை அவருக்கு முதல் வாரம் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சக போட்டியாளர்களான வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.