#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆதி குணசேகரனாக களமிறங்கும் பிரபல நடிகர்.! ... எதிர்நீச்சல் தொடரில் நடிக்க இருப்பது இவர்தானா.?
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமான தொடராக வலம் வருவது எதிர்நீச்சல். இந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் மறைந்த நடிகர் மாரிமுத்து.
அவர் நடித்திருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் தான் இந்த எதிர்நீச்சல் தொடரையே தாங்கி நின்றது. நேற்று அவர் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரங்களில் கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேலா ராமமூர்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொம்பன், மதயானை கூட்டம்,, சேதுபதி போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடிப்பில் மிரட்டியவர் வேலா ராமமூர்த்தி. இவர் திரைப்படங்களில் நடித்ததை விட "அவன் தான் இழந்தாரி பைய" என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.
இவர் எழுதிய குற்ற பரம்பரை என்னும் நூல் மிகவும் பிரபலமானது. தனது யதார்த்தமான நடிப்பால் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய இவர் தற்போது எதிர்நீச்சல் தொடரின் மூலம் சின்னத்திரை உலகிலும் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.