மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. வேற லெவல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா மனைவி, மகளுடன் அடிக்கும் லூட்டியை பார்த்தீர்களா! வைரலாகும் கியூட் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம்ம ஹிட்டாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம் ஆகியவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து வருபவர் வெங்கட். இவர் கனா காணும் காலங்கள் தொடரிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் வெங்கட், அவ்வபோது தனது போட்டோ ஷூட், மற்றும் நடனமாடும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தனது மனைவி,மகளுடன் நடிகர் கவுண்டமணியின் சூப்பர் காமெடியை டப்ஷ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்குகளை குவித்து வருகிறது.