கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அட..சூப்பர்! வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.
அதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இளசுகளை குதூகலப்படுத்தும் வகையில் மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
God is kind.. with the blessings of almighty and my fans I am happy to announce my next, a bilingual film (tamil & telugu) with my brother @chay_akkineni produced by @SS_Screens @srinivasaaoffl #NC22 #VP11 #SSS10 pic.twitter.com/alYcE9mQB4
— venkat prabhu (@vp_offl) April 6, 2022
அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். என்சி 22 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இதுவே நாகசைத்தன்யா நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படமாகும்.